தேசிய கல்வி உதவித் தொகைபெற கல்வி நிலையங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

சிறுபான்மையின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் தொகையைப் பெற  கல்வி நிலையங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
Published on

சிறுபான்மையின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் தொகையைப் பெற  கல்வி நிலையங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:
அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, தொழிற்கல்வி,  பாலிடெக்னிக்,  பட்டயப் பட்டிப்பு, இளங்கலை, முதுகலை, பொறியியல், மருத்துவம், எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு படிக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ, முஸ்லிம், புத்த மதத்தினர், சீக்கியர்,  ஜெயின், பார்சி மத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் தேசிய கல்வி உதவித் தொகை W​W​W.​S​C​H​O​L​A​R​S​H​I​P​S.​G​O​V.​IN என்ற இணையம் மூலமாக வழங்கப்படுகிறது. இதற்காக அனைத்து கல்வி நிலையங்களும் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.
எனவே,  கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களும் பதிவு செய்து பயனீட்டாளர் குறியீடு பெறப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  மேலும் A​I​S​H​E/​U​D​I​SE எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தால் அந்த விவரத்தை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகித் தெரிவிக்க வேண்டும். A​I​S​HE எண் பெறாத கல்வி நிலையங்கள் மத்திய அரசின் 
W​W​W.​A​I​S​H​E.​N​I​C.​IN  என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம். 
மேலும் பள்ளிகளை பொருத்த வரையில் மஈஐநஉ எண்ணிற்கு முதன்மைக் கல்வி அலுவலரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com