நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்

வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் சுற்றியுள்ள புதர்களை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.
Updated on
1 min read

வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் சுற்றியுள்ள புதர்களை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.
  வால்பாறை நகரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுகின்றன. நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவிலும் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.
   இந்நிலையில்,  வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள  நீதிமன்றம் வளாகத்தில் கடந்த  திங்கள்கிழமை இரவு மூன்று சிறுத்தைகள் நடமாடியதை  அப்பகுதி மக்கள் பார்த்து,  நீதிமன்ற ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
  இதனையடுத்து வனத் துறை  அறிவுறுத்தலின்படி, நீதிமன்றம் வளாகத்தில் இருக்கும் புதர்களை வெட்டி  அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று  வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com