இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் மண்டலத் தலைவராக ஆர்.தினேஷும், துணைத் தலைவராக சஞ்சய் ஜெயவர்த்தனவேலுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தென் மாநிலங்கள் அளவிலான இந்திய தொழில் கூட்டமைப்பின் 2018-19-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புதிய தலைவராக சென்னை டி.வி. சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆர். தினேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், இந்திய தொழில் கூட்டமைப்பு சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தின் ஆலோசனைக் குழு தலைவராகவும், போக்குவரத்துத் திறன் குழுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசியக் குழு உறுப்பினராகவும், 2017 -18 -ஆம் ஆண்டுக்கான தென்மண்டல துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
சிஐஐ துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைவராகவும் உள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலக் குழு உறுப்பினராக உள்ள இவர், தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவராகவும், டெக்ஸ்டைல்ஸ் துணைக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... இலக்கு எட்டப்பட்டு விட்டது?

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

