சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கோவை - சென்னை சதாப்தி ரயிலில் அதிநவீன பெட்டி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

கோவை - சென்னை சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்டுள்ள அதிநவீன ரயில் பெட்டி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 3:01 am

கோவை - சென்னை சதாப்தி ரயிலில் இணைக்கப்பட்டுள்ள அதிநவீன ரயில் பெட்டி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி ரயிலில் (எண் 12243 - 12244) தாற்காலிகமாக மார்ச் 28-ஆம் தேதி வரை இணைக்கப்பட்டிருந்த அதிநவீன ரயில் பெட்டி (அனுபூதி), மேலும் 3 மாதங்களுக்கு அதாவது ஜூன் 30-ஆம் தேதி வரை  தாற்காலிக அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
 இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.