மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

பயனீர் கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான மாணவ, மாணவிகளுக்கு

Updated On :29 மார்ச் 2018, 3:01 am

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு,  கல்லூரி நிர்வாக அலுவலர் பத்மலோசணி முன்னிலை வகித்தார்.  முதல்வர் எஸ்.மகேந்திரன் வரவேற்றார். கல்லூரி வேலைவாய்ப்புப் பிரிவு அலுவலர் எஸ்.சுபாஷிணி அறிக்கை சமர்ப்பித்தார். மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சுமார் 326 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினார். 
இக்கல்லூரியில் நடந்த வளாகத் தேர்வில் மைக்ரோ சாப்ட், கூகுள் நிறுவனங்களில் பணிவாய்ப்பு பெற்ற இக்கல்லூரியைச் சேர்ந்த ஏ.ஸ்டீபன்ராஜ், கலைவாணி(அரசுப் பள்ளியில் படித்தவர்கள்) ஆகியோர் ஏற்புரையாற்றினர். தொடர்ந்து கல்லூரி நிகழ்வுகளிலும், வளாக வேலைவாய்ப்பு முகாம்களிலும் பங்கெடுத்து தங்கள் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. உதவிப் பேராசிரியை ரஹமத்தூர் ரூபியா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.