மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜெம் மருத்துவமனையில் குடலிறக்க வெள்ளி விழாக் கண்காட்சி

கோவை ஜெம் மருத்துவமனையில் 25-ஆம் ஆண்டு லாப்பிராஸ்கோப்பி குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை பயண

Updated On :14 மே 2018, 10:25 pm

கோவை ஜெம் மருத்துவமனையில் 25-ஆம் ஆண்டு லாப்பிராஸ்கோப்பி குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை பயண வெற்றியைத் தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற உள்ள குடலிறக்கக் கண்காட்சியை மாநகரக் காவல் ஆணையர் கு.பெரியய்யா தொடக்கிவைத்தார்.
இதுகுறித்து, மருத்துவமனைத் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு கூறியதாவது: குடலிறக்க பாதிப்பு நமது சமுதாயத்தில் காணப்படும் ஒரு முக்கியப் பிரச்னையாக உள்ளது.
முன்னர், குடலிறக்க பாதிப்புக்குத் திறந்த அறுவை சிகிச்சை முறையில் தையல் போட்டு சரி செய்தனர். ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும்வர வாய்ப்பு அதிகம் இருந்ததால் வலை வைத்து சரி செய்தனர்.
அதைத் தொடர்ந்து, லாப்பிராஸ்கோப்பி மூலமாக குடலிறக்க பாதிப்புக்கு வலை வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த லாப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறை கடந்த 1992-ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியாவில் கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் கடந்த 1993-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, 25 -ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
ஜெம் மருத்துவமனை சார்பில் குடலிறக்கக் கண்காட்சியையொட்டி, நோயாளிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சலுகைக் கட்டணத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.