தாராபுரம் மற்றும் மூலனூர் பகுதிகளில் அதிக அளவு முருங்கை உற்பத்தி செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு முருங்கை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.காளிமுத்து திங்கள்கிழமை கூறியதாவது:
இந்த வட்டாரங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் வாழ்வாதாரமாக முருங்கைப் பயிர் இருந்து வருகிறது. சில சமயங்களில் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, முருங்கையிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் மையம் அமைக்க வேண்டும்.
கடந்த காலத்தில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற அனைத்துக் கடன்களையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தள்ளுபடி செய்தார். அதேபோல் தற்போதைய முதல்வரும் விவசாயிகள், சிறு குறு விவசாயிகள் என தரம் பிரிக்காமல் அனைவருக்கும் கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும்.
ஆனைமலை நல்லாறு நீர்தேக்கத் திட்டத்துக்காக தொழில்நுட்ப ஆலோசனை வல்லுநர் குழு அமைத்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. மேலும் இத்திட்டத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி மேற்கு மண்டல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். பாண்டியாறு புன்னம்புழா திட்டத்துக்கும் தொழில்நுட்ப ஆலோசனை வல்லுநர் குழு அமைக்க வேண்டும் .
தாராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள உப்பாறு அணை கடந்த சில வருடங்களாகவே நீர் வரத்து இல்லாமல் வறண்டுள்ளது. அமராவதி அணையிலிருந்து சுமார் 4 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து வரும் நிலையில் இதனைக் கால்வாய் அமைத்து உப்பாறு அணைக்குத் திருப்பிவிட்டால் அணை பயன்பெறும்.
இதுகுறித்து அமைச்சர்கள் மற்றும் நிதி செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றார்.
பேட்டியின்போது சங்கத்தின் மாநில பொதுச்செயலர் கே.எஸ்.சுப்பிரமணியம், நிர்வாக குழு உறுப்பினர் வி.சிவகுமார், அரசியல் ஆலோசகர் சரவணன், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கே.ஏ.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்வாரிய தலைமைப் பொறியாளா் ஆய்வு

17.4.1976: அம்பத்தூரில் ரூ. 2.55 கோடி செலவில் பால் பண்ணை - ராஷ்டிரபதி துவக்கி வைத்தார்

விடியல் அல்ல, விளம்பர ஆட்சிதான் நடத்தியது திமுக! அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

