தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணிக்காக கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தலைமையில் 40 போலீஸார் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதனால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக அருகில் உள்ள மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பாதுகாப்புப் பணிக்காக நூற்றுக்கணக்கான போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தலைமையில் 40 போலீஸார் தூத்துக்குடி சென்றுள்ளனர். மேலும் தமிழ்நாடு பிரிவு போலீஸார் 90 பேரும் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









