கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை, ரத்தினபுரி ஜி.பி.எம். நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், குடும்பத்துடன் மதுரைக்கு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சென்றுள்ளார். பின்னர் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோவில் இருந்த 25 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: வெள்ளலூரை அடுத்த கோணவாய்க்கால்பாளையம் காளியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (37). இவர் லேத் ஒர்க் ஷாப் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சனிக்கிழமை காலை சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக அமைச்சர்களைச் சந்தித்தார் பாடகர் வேடன்!

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை!

பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


