சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

19 ஆண்டுகளாக வீட்டின் நடுவில் இருக்கும் மின் கம்பம்

வீட்டின் நடுவில் 19 ஆண்டுகளாக இருக்கும் மின் கம்பத்தை அகற்றாத நிலையில் குழந்தைக்கு கட்டப்படும் தொட்டிலிலும் மின் கசிவு ஏற்படும் சூழல்

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:16 pm

DIN


வீட்டின் நடுவில் 19 ஆண்டுகளாக இருக்கும் மின் கம்பத்தை அகற்றாத நிலையில் குழந்தைக்கு கட்டப்படும் தொட்டிலிலும் மின் கசிவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை ஊராட்சிக்கு உள்பட்ட கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ளது ராமசாமி நகர். இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் வசித்து வரும் உமர்பாருக் என்பவரது வீட்டின் நடுவில் மின் கம்பம் உள்ளது. அதை அப்புறப்படுத்த வேண்டும் என மின் வாரியம் மற்றும் ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், குடியிருப்புப் பகுதியில் உள்ள மரக் கிடங்குக்கு இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரத்திலும் லாரிகள் வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் லாரிகள் மின் கம்பிகளில் உரசிச் செல்கின்றன. இதனால் மின் கம்பிகள் அறுந்துவிழும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் உமர்பாருக் கூறியதாவது: கடந்த 19 ஆண்டுகளாக வீட்டின் நடுவில் மின் கம்பம் இருந்து வருகிறது. இந்த வழியாக மர அறுப்பு மில்களுக்குச் செல்லும் 16 சக்கர லாரிகள் மின் கம்பிகளில் மோதி செல்வதால் மின் கம்பம் உடையும் நிலையில் உள்ளது.
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால் எங்களை மிரட்டுகின்றனர். வீட்டில் குழந்தைக்கு கட்டும் தொட்டிலில்கூட மின்சாரம் கசிந்து வருகிறது. மேலும், வீட்டில் உள்ள மிக்ஸி, கிரைண்டர், டி.வி. உள்ளிட்ட பல்வேறு மின்சாதனப் பொருள்களும் பழுதடைந்து வருகின்றன.
இப்பிரச்னை தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 10 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மினவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என்றார்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ராமசாமி நகர் பகுதியில் இருந்து மின்கம்பத்தை மாற்றிஅமைத்துத் தரக்கோரி எந்தப் புகாரும் வரவில்லை. அவ்வாறு மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டுமானால் அந்தக் கிராமத்தில் உள்ள 10 பேர் இணைந்து புகார் அளிக்க வேண்டும்.
அப்போது ஷிப்டிங் முறைப்படி மின்கம்பத்தை மாற்றி அமைக்க ஏற்படும் செலவை சம்பந்தப்பட்ட கிராமப் பகுதியில் இருப்பவர்கள்தான் ஏற்க வேண்டும். தனிப்பட்ட ஒருவரது குடியிருப்பில் செல்லும் இணைப்பை மாற்றி அமைக்க வேண்டும் எனில், அவர்களே அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.