சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தொடர் விடுமுறை: வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

Updated On :22 அக்டோபர் 2018, 2:23 am

ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
கடந்த மே மாத கோடை விடுமுறைக்குப் பின்னர் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது. குறிப்பாக வால்பாறை, கேரள மாநிலம், சாலக்குடிக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணிக்காக சாலை  மூடப்பட்டதால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்றி வால்பாறை வெறிச்சோடியது. 
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலக்குடி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதேபோல, ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாகவும் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த திரளான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து சென்றுள்ளனர். இதனால் நான்கு மாதங்களுக்குப் பின்னர் வால்பாறையில் உள்ளஅனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.