கோவையை அடுத்த குனியமுத்தூரில் முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றனர்.
கோவை, இடையர்பாளையம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி சாவித்திரி (55). இவர், அதே பகுதியில் உள்ள மளிகைக்கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் சாவித்திரியிடம் முகவரி கேட்பதுபோல அருகில் வந்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேலூா் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேன் கூடு அகற்றம்!

மேல்விஷாரம் வால்மீகிஸ்வரா் கோயில் பிரதோஷ வழிபாடு

1.5.1976: மொழித் திணிப்புக்கு பிரதமர் இந்திரா காந்தி எதிர்ப்பு!

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

