கோவை, போத்தனூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை, வெள்ளலூரை அடுத்த சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஜெ.நிர்மலா (18). இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கால்நடைப் பிரிவில் தட்டச்சராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் வெள்ளலூர் ராமசாமி கவுண்டர் வீதியில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் நிர்மலா அணிந்திருந்த இருந்த 3 பவுன் நகையைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு

இன்றைய ராசி பலன்கள் (02 மே 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு பணவரவு!

வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

