
அன்னூரில் சாலை மறியல்
டிராக்டர் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்யாததைக் கண்டித்து தலித் அமைப்பினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டிராக்டர் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்யாததைக் கண்டித்து தலித் அமைப்பினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அன்னூரை அடுத்த கணுவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராமன் மகன் மணிகண்டன் (25), டிராக்டர் ஓட்டுநராக உள்ளார். இவரை கடந்த 21ஆம் தேதி ஒரு தரப்பினர் தாக்கியதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்துஅன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்வதில் காலதாமதம் செய்வதாக கூறி தலித் அமைப்பினர் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கருநத்தம்பட்டி டி.எஸ்.பி பாஸ்கரன், அன்னூர் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் புகார் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து பேராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






