திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

காண்டூர் கால்வாய் வழித்தடத்தில் பாறைகள், மண் சரிவு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயின் வழித்தடத்தில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயின் வழித்தடத்தில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிஏபி திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தண்ணீர் பகிர்ந்து வழங்கப்படுகிறது. பரம்பிக்குளம் - தூணக்கடவு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. 49.3 கி.மீ.நீளமுள்ள காண்டூர் கால்வாய் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கால்வாய் ஆகும். 
இந்தக் கால்வாய் பல இடங்களில் சுரங்கங்களுக்கு உள்ளே செல்கிறது. அதிகபட்சமாக 1,150 கன அடி தண்ணீர் கொண்டு செல்லமுடியும். 
பிஏபி திட்ட அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவில் பெய்தது. இதனால், காண்டூர் கால்வாய் செல்லும் வழித்தடத்தை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளில் நீர்வரத்து அதிக அளவில் இருந்தது. மழைக் காலங்களில் ஆங்காங்கே சிறிய அளவில் மண் சரிவு, பாறைகள் சரிவு ஏற்பட்டிருந்த நிலையிலும் பெரிய மண் சரிவு ஏதும் ஏற்படவில்லை.
 பரம்பிக்குளம் - தூணக்கடவில் இருந்து திருமூர்த்தி அணைக்குத் தொடர்ந்து தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக காண்டூர் கால்வாயில் 15க்கும் அதிகமான இடங்களில் பாறைகள், மண்சரிவு ஏற்பட்டு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது. இதுதவிர கால்வாய் தொடங்கும் இடத்தில் இருந்து 14ஆவது கி.மீ. தொலைவில் கால்வாயின் பக்கவாட்டிலும் மண் சரிவு ஏற்பட்டது. 
இதையடுத்து, காண்டூர் கால்வாயில் புதன்கிழமை தண்ணீர் நிறுத்தப்பட்டது. பொதுப் பணித் துறை ஊழியர்கள் காண்டூர் கால்வாயில் சரிந்து விழுந்துள்ள மண், பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இப்பணிகள் வெள்ளிக்கிழமை மதியத்துக்குள் நிறைவடைய வாய்ப்புள்ளதாக பொதுப் பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை முதல் 500 கனஅடி வரை காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்திலும் 34 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.