பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற குறுமைய விளையாட்டுப் போட்டியில், விளையாட்டு மைதானமே இல்லாத அரசம்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் குறுமையம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் கிணத்துக்கடவை அடுத்த அரசம்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள் குறுமைய அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றுள்ளனர்.
குறுமைய அளவில் 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் மாணவி சந்திரகௌரி, நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல், 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய போட்டிகளில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். தடையோட்டத்தில் மாணவி நந்தினி 2ஆம் இடமும், மும்முறை தாண்டுதலில் 2ஆம் இடமும் பிடித்தார்.
3,000 மீ. ஓட்டம், 1,500 மீ. ஓட்டம் ஆகியவற்றில் மாணவி மோகனப்பிரியா முதலிடம் பிடித்தார். 100 மீ. ஓட்டத்தில் ரூபனா மூன்றாமிடம் பிடித்தார். தொடர் ஓட்டத்தில் மாணவிகள் சந்திரகௌரி, நந்தினி, கங்கேஸ்வரி, ரூபனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் சரிதா 100 மீ. ஓட்டத்தில் 2ஆம் இடமும், 600 மீ. ஓட்டத்தில் ஜீவா 3-ஆம் இடமும், 100 மீ. ஓட்டத்தில் கவிதா 3-ஆம் இடமும் பிடித்தனர்.
14 வயதுக்கு உள்பட்ட கபடி போட்டியில் மாணவிகள் முதலிடமும், மாணவர்கள் இரண்டாமிடமும் பிடித்தனர். 17 வயதுக்கு உள்பட்டோர் கபடியில் மாணவியர் முதலிடம் பிடித்து மண்டல அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
சதுரங்கப் போட்டியில் மாவட்ட அளவில் மாணவி ரேணுகா முதலிடம் பிடித்து மண்டலப் போட்டிக்குத் தேர்வு பெற்றார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் குருசாமியும் நிர்வாகிகளும் ஆசிரியர்களும் பாராட்டினர்.
அரசம்பாளைம் அரசு உயர் நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாத நிலையிலும், பகுதிநேர உடற்கல்வி ஆசிரியரே பணிபுரிந்தபோதும் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வா? இபிஎஸ் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்!

கடந்த 5 நிதியாண்டுகளில் 6,255 கிளைகளை திறந்த பொதுத்துறை வங்கிகள்!

RSS கொள்கையில் அமைச்சர் நிர்மல் குமார்! திமுக MLA பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர்கள்!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!
விடியோக்கள்

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech


