
பேருந்தில் முதியவரிடம் 10 பவுன் நகை திருட்டு
பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஆர்.வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (74). இவர் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற செவ்வாய்க்கிழமை பேருந்தில் கோவைக்கு வந்துள்ளார். பின்னர் உக்கடத்தில் இறங்கி பேருந்து மூலம் பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய துரைராஜ் தான் கொண்டு வந்த பையை சரிபார்த்துள்ளார். அப்போது, அதில் வைத்திருந்த 10 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து துரைராஜ் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







