விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

குப்பைக் கிடங்கில் ஆய்வு

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை

Updated On :25 பிப்ரவரி 2019, 10:10 am IST

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் அண்மையில் ஆய்வு நடத்தினார்.
 கோவை மாநகாரட்சி கட்டுப்பாட்டின் கீழ் வெள்ளலூரில் குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
 இங்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் கழிவுகளில் இருந்து மண்புழு உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
 மேலும் உணவுக் கழிவுகளில் இருந்து உயிர்வாயு தயாரித்து இதன் மூலம் மின்சார உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் வளாகத்தின் சாலையோரத்தில் மரக்கன்று நடவு செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.