திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தாசநாயக்கன்பாளையத்தில் வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்

சூலூர் அருகே தாசநாயக்கன்பாளையத்தில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர். 

Updated On :23 ஜனவரி 2019, 9:19 am IST

சூலூர் அருகே தாசநாயக்கன்பாளையத்தில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர். 
கோட்டூர் மலையாண்டிப்பட்டினத்தைச் சேர்ந்த 16 பேர் காங்கயம் அருகே பாப்பினி பகுதியில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு வேனில் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவர். கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 
சூலூர், சுல்தான்பேட்டையை அடுத்த தாசநாயக்கன்பாளையம் அருகே வரும்போது,  சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன்,  பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த நாட்ராயன் மகன் ஆறுச்சாமி (32), பாலசுப்பிரமணியன் மகன் சக்திவேல் (16), மணி மகன் செந்தில்குமார்(31), குப்புசாமி மகன் முருகானந்தம் (52), லட்சுமணன் மகன் முருகேசன் (40), முருகேசன் மகன் காளிமுத்து (18) ஆகியோர் காயமடைந்தனர்.  இவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.