நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி பொள்ளாச்சியில் ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் 122ஆவது பிறந்தநாளையொட்டி பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரவையின் தலைவர் வெள்ளை நடராஜ் தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். நிர்வாகிகள் பாலமுருகன், ஹரிகிருஷ்ணன், செந்தில்குமார், தினேஷ்குமார், ஹரீஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிய்ல் ஆயிரம் நபர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. என்ஜிஎம் கல்லூரி முதல்வர் பழனிசாமி நேதாஜி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். கல்லூரி மேலாளர் ரகுநாதன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முத்துக்குமரன், மதிமுக மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில், பாஜக மாவட்ட செயலாளர் பாலு, தேமுதிக நகர செயலாளர் கணேஷ், இந்து முன்னனி நிர்வாகி சீனிவாசன், திராவிட விடுதலைக்கழக நிர்வாகி வெள்ளிங்கிரி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


