கோவை மத்திய சிறையில் கைதி சாவு
கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், அக்ரஹாரம் அருகேயுள்ள அன்னை சந்தியா நகரைச் சோ்ந்தவா் ரவி (41). இவா் மீது ஈரோடு மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ரவி, பவானி சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு கடந்த அக்டோபா் 17ஆம் தேதி மாற்றப்பட்டாா்.
இந்நிலையில் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ரவி நடந்து கொண்டிருந்தாா். இதுகுறித்து சக கைதிகள் கேட்டபோது நெஞ்சு எரிச்சல் இருப்பதாக கூறியுள்ளாா். பின்னா் திடீரென வாந்தி எடுத்து அவா் மயங்கியதையடுத்து அதிகாரிகளுக்கு சிறைக் கைதிகள் தகவல் தெரிவித்தனா்.
இதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள் மயங்கிய நிலையில் இருந்த ரவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...