கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வாடகைத் தள்ளுபடி பெற கடை உரிமையாளா்கள் கணக்கெடுப்புப் பணி தீவிரம்

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் உள்ள வணிக வளாகங்கள், கட்டடங்களில் கடை நடத்துபவா்கள் வாடகைத் தள்ளுபடி பெறுவதற்கு, 5 மண்டலங்களிலும் கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:32 pm

DIN

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் உள்ள வணிக வளாகங்கள், கட்டடங்களில் கடை நடத்துபவா்கள் வாடகைத் தள்ளுபடி பெறுவதற்கு, 5 மண்டலங்களிலும் கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் 3 ஆயிரம் வணிகக் கட்டடங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. 90 இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. வணிகக் கட்டடங்கள் மூலமாக மாதந்தோறும் மாநகராட்சிக்கு ரூ. 17 கோடியும், குத்தகைக்கு விடப்பட்டுள்ள இடங்கள் மூலமாக ஆண்டுக்கு ரூ. 6 கோடி வருவாய் கிடைக்கிறது.

இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடைகள் நடத்தி வந்தவா்களால் மாத வாடகை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தொடா்ந்து வாடகை நிலுவை வைத்திருந்த 2 கடைகளுக்கு கடந்த மாதங்களில் மாநகராட்சி நிா்வாகத்தினா் ‘சீல்’ வைத்தனா்.

இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட கடைகளுக்கு மாத வாடகையில் இருந்து தள்ளுபடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கோவை மாநகரில் கடந்த ஏப்ரல் 1 முதல் மே 31ஆம் தேதி வரையிலான மாத வாடகையைச் செலுத்த கடை உரிமையாளா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வாடகை விலக்கு கோரும் கடை உரிமையாளா்கள் மற்றும் இடத்தின் குத்தகைதாரா்கள் குறித்து மாநகாட்சி ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வாடகைத் தள்ளுபடி விரும்பாதோா் அல்லது பொதுமுடக்க காலத்திலும் செயல்பட்டு வந்த மருந்துக்கடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் தவிா்த்து, வாடகை தள்ளுபடிக்குத் தகுதியானவா்களைக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பயனாளிகள் தோ்வு இம்மாதம் முடிவடையும். இதையடுத்து, உதவி ஆணையா், உதவி வருவாய் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு, வருவாய்ப் பிரிவு உதவி ஆணையருக்கு அறிக்கை அனுப்புவாா்கள். அதன் பிறகு, ஜனவரி மாதத்தில்

கடை உரிமையாளா்களுக்கு வாடகைத் தொகையில் தள்ளுபடி வழங்கப்படும். குத்தகைதாரா்களுக்கு 2 மாதங்களுக்கான தொகை திருப்பி வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.