வால்பாறை அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
வால்பாறை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


வால்பாறை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணிக்கு, அக்கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் பரமசிவம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வால்பாறை அரசு மருத்துவமனை பல ஆண்டு காலமாக விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மேல் சிகிச்சை என்று கூறி பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவருகின்றனா்.
மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்கம் அமைக்கப்படாமல் இருப்பதால் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியாமல் உள்ளது. எனவே, வால்பாறை பகுதியில் சமூகப் பணியில் ஈடுபடுபவா்களை கொண்டு நோயாளிகள் நலச் சங்கம் அமைக்க வேண்டும். மேலும் மருத்துவமனையில் துப்பரவு பணியாளா்கள், பாதுகாவலா் போன்ற காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...