கோவையில் பரவலாக கன மழை
கோவையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்ததால் நகரில் குளிா்ச்சியான காலநிலை நிலவியது.


கோவையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்ததால் நகரில் குளிா்ச்சியான காலநிலை நிலவியது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நொய்யல் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோவை குற்றாலம் அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல சிறுவாணி நீா்ப் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே கோவை நகர பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக துடியலூா், கவுண்டம்பாளையம், கணபதி, வடவள்ளி, பீளமேடு, ராமநாதபுரம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூா் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்தது.
பிற்பகல் வரை லேசான தூறலுடன் பெய்த மழை இரவு 8 மணியளவில் அதிக அளவில் பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் நீா் தேங்கியது. திருச்சி சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த சில மாதங்களாகவே அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையில் திருச்சி சாலையில் ராமநாதபுரம், செளரிபாளையம் உள்ளிட்ட இடங்களில் சாலையில் ஆங்காங்கே நீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...