கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவையில் ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை - ரூ.87 ஆயிரம் பறிமுதல்

கோவை க.க. சாவடியில் உள்ள  ஆர்.டி.ஓ  சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு,

News image
கோவையில் ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை.
Updated On :12 டிசம்பர் 2020, 4:09 am

DIN

கோவை க.க. சாவடியில் உள்ள  ஆர்.டி.ஓ  சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வாளர் உட்பட 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை திருமலையம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மேற்கு ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கவதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காலை 6.00 மணி அளவில் கோவை லஞ்ச ஒழிப்பு துறை காவல்துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோரது தலைமையில் சென்ற போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

6 மணியில் இருந்து சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ .87 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா, அவரது உதவியாளர் அருண்குமார், ஆகிய 2 பேரை பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட சோதனையின் போது இதே சோதனைச் சாவடியில் ரூ.91 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.