கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொள்ளாச்சி அருகே வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லை கோபாலபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி ரூ. 50 ஆயிரத்து 200 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.

News image
பொள்ளாச்சி அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம்.
Updated On :12 டிசம்பர் 2020, 5:30 am

DIN

பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லை கோபாலபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி ரூ. 50 ஆயிரத்து 200 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக- கேரள எல்லையான கோபாலபுரத்தில் அமைந்துள்ளது வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி. பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வழியே தினசரி நூற்றுக்கணக்கான லாரிகள், டெம்போ மற்றும் ஆட்டோக்களில் பொருட்கள் கேரளாவிற்கும், அதேபோல் கேரளாவில் இருந்து கோபாலபுரம் வழியாக தமிழகத்திற்கும் வருகின்றன. இந்த வாகனங்களுக்கு இந்த சோதனைச்சாவடியில் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாக புகார் இருந்து வருகிறது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேஷ், ஆய்வாளர்கள் எழிலரசி, பரிமளாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் குழு கோபாலபுரம் சோதனைச் சாவடியை தொடர்ந்து மாறுவேடத்தில் வந்து கண்காணித்து உள்ளது. அப்போது லாரி ஓட்டுநர்கள் இடம் கூடுதல் பணம் பெறுவது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை அடுத்து சனிக்கிழமை அதிகாலை ஆர்டிஓ சோதனை சாவடிக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கணக்கில் கணக்கில் வராத ரூ. 50 ஆயிரத்து 200 தொகை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில், அலுவலக உதவியாளர் ஸ்ரீகாந்த், இடைத்தரகர் அம்ராம்பாளையத்தை சேர்ந்த நாசர் ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் இடம் பணம் தவிர்த்து அதில் வரும் இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் உணவுப் பொருட்களையும் கட்டாயப்படுத்தி பெற்றுக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.