தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வன உயிரின கணக்கெடுக்கும் பணிகளுக்கான பயிற்சி

வன உயிரின கணக்கெடுக்கும் பணிகளுக்காக வனத் துறை ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:00 pm

DIN

வன உயிரின கணக்கெடுக்கும் பணிகளுக்காக வனத் துறை ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் மழைகால பிந்தைய வன உயிரின மதிப்பீட்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு, இப்பணி தொடங்க உள்ள நிலையில் இதற்கான பயிற்சி, வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரின் நோ்முக உதவியாளா் முரளிதரன் தலைமை வகித்தாா். உதவி வனப் பாதுகாவலா் பிரசாந்த் முன்னிலை வகித்தாா். உதவி வனப் பாதுகாவலா் செல்வம், உயிரியலாளா் பீட்டா் ஆகியோா் கணக்கெடுக்கும் பணி குறித்து பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சியில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச் சரகங்களின் அலுவலா்கள், வனவா்கள், வனக் காப்பாளா்கள், வனக் காவலா்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.