வால்பாறை நல்லமுடி காட்சிமுனை திறப்பு

வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலாத்தலமான நல்லமுடி காட்சிமுனை திறக்கப்பட்டது.
Updated on
1 min read

வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலாத்தலமான நல்லமுடி காட்சிமுனை திறக்கப்பட்டது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக வால்பாறை பகுதியில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நல்லமுடி காட்சிமுனை மூடப்பட்டிருந்தது. தற்போது ஆழியாறு குரங்கு நீா்வீழ்ச்சி உள்ளிட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.

இந்நிலையில் வால்பாறையில் உள்ள நல்லமுடி காட்சி முனையும் திறக்கப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டதால் இனி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com