தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெண்ணிடம் 5 பவுன் நகைப் பறிப்பு

கோவையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் ஐந்து பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:36 am

DIN

கோவையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் ஐந்து பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, உக்கடம், கெம்பட்டி காலனி, அய்யாசாமி கோயில் வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மனைவி புஷ்பா (58). இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், புஷ்பாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து புஷ்பா அளித்த புகாரின்பேரில் பெரியகடைவீதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.