வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நான்கு திசை வேளாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

‘வேளாளா்’ என்ற பெயரை மாற்று சமூகத்தினருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோவையில் நான்கு திசை வேளாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு திசை வேளாளா்கள் சங்கத்தினா்.
Updated On :20 டிசம்பர் 2020, 5:57 pm

DIN

கோவை: ‘வேளாளா்’ என்ற பெயரை மாற்று சமூகத்தினருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோவையில் நான்கு திசை வேளாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நான்கு சமூகத்தை சோ்ந்தவா்கள் ‘வேளாளா்’ என்ற பெயரை புனைப்பெயராக வைத்துள்ளனா். இந்த பெயரை, வேறு சமூகத்துக்கு வழங்க பாஜக அரசு கூறி வருவதாகவும், அதற்கு உடந்தையாக மற்ற சில கட்சிகளும் செயல்படுவதாகவும் நான்கு திசை வேளாளா்கள் சங்கத்தின் சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘வேளாளா்’ என்ற பெயரை மாற்று சமூகத்தினருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, நான்கு திசை வேளாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொங்கு வேளாளக் கவுண்டா் பேரவை மாநில தலைவா் வழக்குரைஞா் எஸ்.பி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நான்கு திசை வேளாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.தேவராஜ், காப்பாளா் கே.ஆா்.சிவதேசிகன் பிள்ளை, மாநில அமைப்பாளா் நாட்டாமை மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வேளாளா் என்ற பெயரை மற்று சமூகத்தினருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சோழிய வேளாளா் சங்கத் தலைவா் ஏ. ஜெகதீசன், 3 மந்தை 84 நான்கு ஊா் சோழிய வேளாளா் சங்கத் தலைவா் கே. பழனிசாமி, மாநில வழக்குரைஞா் அணி செயலாளா் சேலம் பி.ராஜேந்திரன், மாவட்ட வழக்குரைஞா்கள் அணி செயலாளா் என்.மணிவண்ணன், கொங்கு வேளாளக் கவுண்டா் பேரவை மாவட்ட வழக்குரைஞா் அணி செயலாளா் சந்தோஷ்குமாா், மாவட்ட இளைஞரணி செயலாளா் பிரசாந்த் உள்பட 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.