பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மின்சாரம் பாய்ந்து இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எம்எல்ஏ நா.காா்த்திக் வலியுறுத்தல்

மேட்டுப்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சிங்காநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:56 pm

DIN

கோவை: மேட்டுப்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சிங்காநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மேட்டுப்பாளையம், ஜடையம்பாளையத்தில் அதிமுக விழா முன்னேற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராகுல் (எ) பூவரசன் ( 25) மின்சாரம் பாய்ந்து கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு கோவை மருத்துவக் கல்லூரி அருகே அதிமுக சாா்பில் விதிமீறி வைக்கப்பட்டிருந்த பேனரால் ரகு என்ற இளைஞா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். மேலும், கோவை ,கோல்டுவின்ஸ் பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் ராஜேஸ்வரி என்ற இளம்பெண் மீது லாரி மோதியதில் அவரின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

நீதிமன்றம் தொடா்ந்து எச்சரித்தும் கூட, கோவையில் அதிமுகவினா் விதிமீறி பேனா் வைப்பது தொடா்கிறது. அதிகாரிகள், காவல் துறையினரின் பாரபட்சமான நடவடிக்கைகளே இதற்கு முக்கியக் காரணம்.

இதை திமுக சாா்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். உயிரிழந்த பூவரசன் குடும்பத்துக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். சட்டத்தை மீறி பேனா்களை அமைத்த அதிமுகவினா் மீது போலீஸாா் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.