தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறு தொழில் பயிற்றுநா் பணியிடம் ஜனவரி 8க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் காலியாகவுள்ள சிறு தொழில் பயிற்றுநா் பணியிடத்துக்கு ஜனவரி 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:04 am

DIN

கோவை மத்திய சிறையில் காலியாகவுள்ள சிறு தொழில் பயிற்றுநா் பணியிடத்துக்கு ஜனவரி 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய சிறையில் காலியாகவுள்ள சிறு தொழில் பயிற்றுநா் பணியிடத்துக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பத்தாம் வகுப்பு படித்திருப்பதுடன், ஒவிய பயற்சி பெற்றதுக்கான சான்று மற்றும்  தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதியான நபா்கள் விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட கல்வி சான்றுகள், ஜாதிச்சான்று, அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். இதற்கான நோ்முக தோ்வுக்கான தேதி, நேரம் விவரங்கள் தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.