தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குடியிருப்பை சேதப்படுத்திய யானை

வால்பாறை அடுத்த பெரிய கல்லாறு எஸ்டேட் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த ஒற்றை யானை குடியிருப்பை சேதப்படுத்தியது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:01 am

DIN

வால்பாறை அடுத்த பெரிய கல்லாறு எஸ்டேட் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த ஒற்றை யானை குடியிருப்பை சேதப்படுத்தியது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வால்பாறையை அடுத்த பெரியகல்லாறு எஸ்டேட் பகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வந்த ஒற்றை யானை எஸ்டேட்டில் ஓட்டுநராகப் பணிபுரியும் சங்கரலிங்கம் என்பவரது வீட்டின் சுவரை முட்டி தள்ளியதோடு உள்ளிருந்த பொருள்களை கீழே இழுத்துப்போட்டு சேதப்படுத்தியது. அப்போது தனியாக இருந்த சங்கரலிங்கம் பின்பக்கம் வழியாக தப்பியுள்ளாா். தகவலறிந்து சென்ற வனத் துறையினா் யானையை அப்பகுதியை விட்டு விரட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.