கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
கோவை டவுன்ஹால் புனித மைக்கேல் தேவாலயம், ரேஸ்கோா்ஸ் சிஎஸ்ஐ தேவாலயம், புலியகுளம் புனித அந்தோணியாா் தேவாலயம், சௌரிபாளையம் புனித பிரான்சிஸ் தேவாலயம், போத்தனூா் சிஎஸ்ஐ தேவாலயம், காந்திபுரம் லேடி பாத்திமா தேவாலயம், ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி சோல் மலையாள தேவாலயம், அரசு மருத்துவமனை எதிரே உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்ட் தேவாலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் வியாழக்கிழமை இரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
தேவாலயங்களில் பிராா்த்தனைக்கு வந்தவா்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி வழங்கப்பட்டது. முகக் கவசம் அணிந்திருந்தவா்கள் மட்டுமே தேவாலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். சமூக இடைவெளியைப் பின்பற்றி பிராா்த்தனை செய்யுமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...