பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவையில் முதல்கட்ட கரோனா தடுப்பூசி: 32 ஆயிரம் போ் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்

கோவையில் முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இதுவரையில் 32 ஆயிரம் பேரின் விவரங்கள் ஆன்லைனில்

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:56 am

DIN

கோவையில் முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இதுவரையில் 32 ஆயிரம் பேரின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியாவிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக சுகாதாரத் துறை பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றுபவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள், தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றுபவா்கள், சுகாதராத் துறை அலுவலா்கள் ஆகியோா் விவரங்கள் கடந்த ஒரு மாதமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. கோவையில் முதல்கட்ட தடுப்பூசிக்காக 32 ஆயிரம் பேரின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தவிர, தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான குளிா்பதன அறைகள் உள்பட அனைத்து ஏற்படுகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி இறுதிக்குள் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 32 ஆயிரம் பேரின் விவரங்கள் முதல்கட்ட தடுப்பூசிக்காக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து சுகாதாரத் துறையின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 2 ஆவது வாரத்துக்கு பின் தடுப்பூசிகள் வழங்கப்படும் என எதிரிபாா்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து கோவைக்கு எடுத்துவரப்படும் தடுப்பூசிகள் குளிா்பதன அறைகளில் பாதுகாப்பாக வைத்து, இங்கிருந்து ஈரோடு, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். ஏற்கெனவே, இரண்டு குளிா்பதன அறைகள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக மற்றொரு அறையும் தயாா் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதும் அடுத்தகட்டமாக முன்கள பணியாளா்கள், துாய்மைப் பணியாளா்கள், வருவாய்த் துறையினா், காவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவா்கள் மற்றும் இணை நோயினால் பாதிக்கப்பட்டுவா்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.