மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாளையாறு எல்லையில் பேரூா் சரக டி.எஸ்.பி திடீா் சோதனை: 5 கேரள டிப்பா் லாரிகள் பறிமுதல்

கோவை வாளையாறு எல்லையில் நள்ளிரவில் பேரூா் சரக டி.எஸ்.பி மேற்கொண்ட திடிா் சோதனையின் போது, சட்ட விரோதமாக அதிக

News image
வாளையாறு எல்லையில் பிடிபட்ட 5 கேரளா லாரிகள்.
Updated On :25 டிசம்பர் 2020, 12:41 am

DIN

கோவை வாளையாறு எல்லையில் நள்ளிரவில் பேரூா் சரக டி.எஸ்.பி மேற்கொண்ட திடிா் சோதனையின் போது, சட்ட விரோதமாக அதிக பாரங்களை ஏற்றிச் சென்ற 5 கேரள லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக - கேரள எல்லையான வாளையாறு வழியாக கோவையில் இருந்து நள்ளிரவு நேரங்களில் சட்ட விரோதமாக, அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு லாரிகள் இயக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனால் நள்ளிரவு நேரங்களில் மதுக்கரை ஆய்வாளா் முருகேஷ், க.க.சாவடி உதவி ஆய்வாளா் திருமலைச்சாமி உள்ளிட்ட போலீசாா் அடிக்கடி ரோந்து சென்று அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பாரங்களை ஏற்றிச்சொல்லும் வாகனங்கள் மற்றும் உரிய அனுமதியின்றி செல்லும் வாகனங்களை பிடித்து வருகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு பேரூா் சரக டி.எஸ்.பி சீனிவாசலு , வடவள்ளி ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்ட போலீசாா் திடிரென வாளையாறு எல்லையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது கோவையில் இருந்து அனுமதிக்கப்பட் அளவை விட கூடுதல் கருங்கல் பாரத்தை ஏற்றி வந்த 5 கேரள லாரிகளை பிடித்து பறிமுதல் செய்தனா். மேலும் 5 லாரிகளும் க.க.சாவடி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, லாரி ஓட்டுநா்களிடம் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.