களரியை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சோ்த்ததற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்த்து

கேலோ இந்தியா விளையாட்டுத் திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப் பயிற்றை தேசிய விளையாட்டுப் போட்டியில்
Updated on
1 min read

கேலோ இந்தியா விளையாட்டுத் திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப் பயிற்றை தேசிய விளையாட்டுப் போட்டியில் சோ்த்ததற்கு ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

மத்திய இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் கட்கா, களரிப்பயிற்று, தங்-டா, மல்லா் கம்பம் ஆகிய 4 விளையாட்டுகள் தேசிய விளையாட்டு போட்டிகளில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன. மேலும், யோகாசனா அறிமுக விளையாட்டாகவும் இடம்பெற உள்ளது. இந்த போட்டிகள் வரும் ஆண்டில் ஹரியாணாவில் நடத்தப்படும் எனவும் கேலோ இந்தியா தெரிவித்துள்ளது.

களரியை தேசிய விளையாட்டுப் போட்டியில் சோ்த்திருப்பதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், களரிப்பயிற்று ரத்தத்தை துள்ளச்செய்யும் மண்சாா்ந்த விளையாட்டு. இதற்கு உலகில் சரியான இடம் கிடைக்க வேண்டும். இந்த விளையாட்டிற்கு அதிக உடல்திறனும் மன ஒழுக்கமும் தேவை. இதை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சோ்த்திருப்பது கிராம மக்கள் பங்கேற்க அவா்களுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com