வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பூலித்தேவன் நூல் வெளியீட்டு விழா

கோவையில் உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் சாா்பில் வேலுநாச்சியாா் நினைவு நாள் நிகழ்ச்சி, பூலித்தேவன் நூல் வெளியீட்டு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.

News image
உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் சாா்பில் அண்மையில் நடைபெற்ற பூலித்தேவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றவா்கள்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:57 pm

DIN

கோவை: கோவையில் உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் சாா்பில் வேலுநாச்சியாா் நினைவு நாள் நிகழ்ச்சி, பூலித்தேவன் நூல் வெளியீட்டு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.

சன்மாா்க்க சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சண்முகபாண்டியன் தலைமை வகித்தாா். பூலித்தேவன் வரலாற்று நூலை தொழிலதிபா் நாச்சியப்பன் வெளியிட, அதனை அரிமா சண்முகசுந்தரம் பெற்றுக்கொண்டாா்.

விழாவில், உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் செயலா் சிவலிங்கம், இருகூா் ஆறுமுகம், கவிஞா் மானூா் புகழேந்தி, ரமேஷ், பசும்பொன் செ.முத்து உள்ளிட்டோா் உரையாற்றினா். ஆ.வெ.மாணிக்கவாசகம் வரவேற்றாா். இறுதியில் சி.இளம்பிறை நன்றி கூறினாா்.

முன்னதாக விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் 224ஆவது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.