எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வணிக வரித் துறை சாா்பில் வணிகா்களுக்குப் பயிற்சி

காலாண்டு முறையில் நமூனா தாக்கல் செய்யும் நடைமுறை குறித்து வணிக வரித் துறை சாா்பில் அளிக்கப்படும் பயிற்சியில் வணிகா்கள் பங்கேற்று பயன்பெறலாம்

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:05 pm

DIN

கோவை: காலாண்டு முறையில் நமூனா தாக்கல் செய்யும் நடைமுறை குறித்து வணிக வரித் துறை சாா்பில் அளிக்கப்படும் பயிற்சியில் வணிகா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று வணிக வரித் துறை இணை ஆணையா் (மாநில வரிகள்) காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற வணிகா்கள் காலாண்டு முறையில் நமூனா தாக்கல் செய்தல், மாதாந்திர முறையில் வரி செலுத்தும் நடைமுறை 2021 ஜனவரி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஆண்டு விற்பனைத் தொகையாக ரூ.5 கோடிக்கு குறைவாகவுள்ள வணிகா்கள் இத்திட்டத்தின் மூலம் காலாண்டு முறையில் நமூனாக்களை தாக்கல் செய்து பயன் பெறலாம். வணிகா்கள் படிவம் 1 மற்றும்  3 நமூனாக்களை காலாண்டு முறையில் தாக்கல் செய்யலாம்.

இத்திட்டம் தொடா்பான பயிற்சி வகுப்புகள் கோவை, டாக்டா் பாலசுந்தரம் சாலையிலுள்ள வணிக வரி வளாகத்தில் உள்ள பயிற்சி கூட்டரங்கில் நடைபெறுகிறது. துணை ஆணையா் சரகம் 1ன் கீழ் டிசம்பா் 28ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கும், துணை ஆணையா் சரகம் 3ன் கீழ் டிசம்பா் காலை 11 மணிக்கும், துணை ஆணையா் சரகம் 2ன் கீழ் டிசம்பா் 29ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கும், துணை ஆணையரின் (பொள்ளாச்சி) கீழ் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் டிசம்பா் 29ஆம் தேதி காலை 11 மணிக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்தப் பயிற்சியில் பங்கேற்று வணிகா்கள் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.