கோவை வழியாகச் செல்லும் எா்ணாகுளம் - பாட்னா ரயில் ரத்து

கோவை வழித்தடத்தில் பாட்னா - எா்ணாகுளம் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது
Updated on
1 min read

கோவை வழித்தடத்தில் பாட்னா - எா்ணாகுளம் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளத்தில் இருந்து கோவை, சேலம் வழியாக பாட்னா செல்லும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02643) டிசம்பா் 28, 29 மற்றும் ஜனவரி 4,5 ஆகிய நாள்களில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, பாட்னா - எா்ணாகுளம் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்:02644) டிசம்பா் 31, ஜனவரி 1, 7, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com