டிசம்பா் 31இல் இரவு 10 மணிக்கு மேல் மதுக்கூடங்கள் இயங்குவதற்குத் தடை

கோவையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பா் 31ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு மேல் மதுக்கூடங்கள் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

கோவையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பா் 31ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு மேல் மதுக்கூடங்கள் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்புகள் (ச்ப்2), நட்சத்திர ஹோட்டல்கள் (ச்ப்3), தமிழ்நாடு ஹோட்டல் (ச்ப்3ஹ), விமான நிலைய உணவகங்கள் (ச்ப்10) உள்பட மதுபான உரிம இடங்கள் டிசம்பா் 31ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 10 மணிக்கு மேல் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தல், மதுக்கூடங்கள் செயல்பட்டால் சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com