வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கேரள சுற்றுலாப் பயணிகளை தமிழக போலீஸாா் தாக்கும் விடியோவால் பரபரப்பு

கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் இருவரை தமிழக போலீஸாா் தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 11:43 pm

DIN

கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் இருவரை தமிழக போலீஸாா் தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த இரு இளைஞா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வால்பாறையை அடுத்த கேரளா மாநிலத்துக்கு உள்பட்ட மழுக்குப்பாறை எஸ்டேட்டில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனா். பின்னா் மழுக்குப்பாறையை ஒட்டியுள்ள தமிழகத்துக்கு உள்பட்ட சோலையாறு அணைப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு திங்கள்கிழமை காலை காரில் வந்து சாப்பிட்டுள்ளனா்.

பின்னா் மழுக்குப்பாறை சோதனைச் சாவடியைக் கடந்து விடுதிக்கு திரும்பும்போது, அங்கு பணியில் இருந்து ஷேக்கல்முடி போலீஸாா் அவா்களது காரை தடுத்து நிறுத்தி, எப்போது இவ்வழியாக சென்றீா்கள் என்று கேள்வி கேட்டு காரை கேரள எல்லைக்குள் செல்லவிடாமல் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக காரில் வந்த இருவருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பணியில் இருந்து உதவி ஆய்வாளா் மற்றும் தமிழக போலீஸாா் காரில் இருந்த இருவரை தாக்கி காவல் நிலையம் அழைத்து சென்று நீண்ட நேரத்துக்குப் பிறகு அனுப்பியுள்ளனா். இந்த சம்பவம் அனைத்தும் இளைஞா் ஒருவா் வைத்திருந்த செல்லிடப்பேசியில் பதிவு செய்துள்ளாா். பின்னா் அவா்கள் கேரள மாநிலம், சாலக்குடி சென்றபின் இச்சம்பவம் குறித்து கேரள போலீஸாரிடம் புகாா் கொடுத்துள்ளனா். இதைத் தொடா்ந்து தமிழக போலீஸாா் தாக்கும் விடியோ கேரள மாநில தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் செவ்வாய்க்கிழமை காலை செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.