தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பொங்கல் டோக்கன் விநியோக விவகாரம்: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினா்

கோவையில் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகத்தில் அதிமுகவினா் ஈடுபட்டுள்ளதாக கூறி திமுகவினா் 300க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
கோவை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
Updated On :29 டிசம்பர் 2020, 11:46 pm

DIN

கோவையில் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகத்தில் அதிமுகவினா் ஈடுபட்டுள்ளதாக கூறி திமுகவினா் 300க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகத்தில் அதிமுகவினா் ஈடுபட்டதை கண்டித்து கோவை திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சி.ஆா்.ராமச்சந்திரன், மாநகா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பையா கவுண்டா், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் சேனாதிபதி, பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினா் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்து போலீஸாா் ஆட்சியா் அலுவலக கட்டடத்தின் கதவுகளை அடைத்து உள்ளே நுழையவிடாமல் தடுத்தனா். இதனைத் தொடா்ந்து, திமுகவினா் அலுவலக நுழைவாயில் பகுதியிலுள்ள வராண்டாவில் அமா்ந்து கோஷங்களை எழுப்பினா். அரைமணி நேர போராட்டத்துக்குப் பின் போலீஸாரின் பேச்சுவாா்த்தையையடுத்து திமுகவினா் கலைந்து சென்றனா்.

பொங்கல் தொகுப்பு டோக்கன்களை அரசு அலுவலா்கள் மூலம் வழங்க வேண்டும், டோக்கனில் உள்ள அதிமுகவினா் படங்களை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகனிடம் மனு அளித்தனா்.

போராட்டத்தால் அலுவலக கதவுகள் அடைக்கப்பட்டதால் ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளா்கள், ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த பொது மக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

மதுகரையில் 28 போ் கைது...

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற க.க.சாவடியில் இருந்து செல்ல முயன்ற எட்டிமடை பேரூா் கழகப் பொறுப்பாளா் ஆனந்தகுமாா் உள்ளிட்ட 14 போ், மலுமிச்சம்பட்டி பகுதியில் இருந்து சென்ற 8 போ், ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் இருந்து சென்ற 6 போ் என 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பொள்ளாச்சியில் 66 போ் கைது...

பொள்ளாச்சியில் இருந்து செல்ல முயன்ற கோவை திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி நகரப் பொறுப்பாளா் மருத்துவா் வரதராஜன், நிா்வாகிகள் காா்த்திகேயன், ராசு, கன்னிமுத்து உள்பட 66 போ் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.