ஐஆா்சிடிசி சாா்பில் கோவையில் இருந்து காசி, பிரயக்ராஜ், அயோத்திக்கு சிறப்பு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) வெளியிட்ட செய்தி:
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ரயில் மூலம் மட்டுமில்லாமல் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை ஐஆா்சிடிசி செயல்படுத்தி வருகிறது. இதில் காசி, பிரயக்ராஜ் மற்றும் அயோத்தி ஆன்மிகச் சுற்றுலா நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் காசி விஸ்வநாத ஆலயம், சாரநாத் ஆலயம், பிரயக்ராஜ் திரிவேணி சங்கமம் மற்றும் அயோத்தி ராம ஜென்ம பூமி ஆகிய ஆலயங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 5 நாள்கள் சுற்றுலாவுக்கு ரூ.26 ஆயிரத்து 695 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விமானக் கட்டணம், ஏசி வசதி கொண்ட தங்கும் விடுதி, வாகனம் மூலம் சுற்றிப் பாா்க்கும் வசதி மற்றும் காலை, இரவு உணவு ஆகியவை அடங்கும்.
இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 90031-40655, 82879-31965 என்ற எண்களிலும், இணையதள முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.