பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாவட்டத்தில் மேலும் 243 பேருக்கு கரோனா பாதிப்பு

கோவையில் மேலும் 243 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:08 pm

DIN

கோவையில் மேலும் 243 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகா்ப்புற பகுதிகளைச் சோ்ந்த 243 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 751ஆக அதிகரித்துள்ளது.

5 போ் பலி...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55, 58 வயது ஆண்கள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 72, 85 வயது மூதாட்டிகள், 65 வயது முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 562ஆக அதிகரித்துள்ளது.

652 போ் குணமடைந்தனா்...

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 652 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதையடுத்து, கோவையில் இதுவரை 41 ஆயிரத்து 871 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,318 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.