பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்கள் விரைவில் மூடல்

கோவையில் கரோனா நோய்த் தொற்று குறைந்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்கள் விரைவில் மூடப்படவுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 9:19 pm

DIN

கோவையில் கரோனா நோய்த் தொற்று குறைந்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்கள் விரைவில் மூடப்படவுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்தாா்.

கோவையில் அறிகுறிகள் இல்லாமல் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொடிசியா, அன்னூா், துடியலூா், கருமத்தம்பட்டி, சித்தாபுதூா், காளப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் 5 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த சிகிச்சை மையங்களில் செப்டம்பா் மாதத்தில் அதிகமானோா் சிகிச்சை பெற்றனா். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கோவையில் கரோனா பரவல் குறைந்து வருவதால் கொடிசியா தவிர மற்ற கரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இதனைத் தொடா்ந்து, கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களை மூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:

கோவையில் தற்போது மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இதில் கரோனா சிகிச்சை மையங்களில் 500 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். கொடிசியா மையத்தில் மட்டும் 1,128 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது அங்கு 234 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். 894 படுக்கைகள் காலியாகவுள்ளன.

இதனால் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களை மூடிவிட்டு கொடிசியாவில் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர காளப்பட்டியில் பெண்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சை மையமும் தற்காலிகமாக மூடப்படுகிறது. தேவைபட்டால் சிகிச்சை மையங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.