பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி ஆட்சியா் முன்னிலையில் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

News image
ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி ஆட்சியா் முன்னிலையில் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
Updated On :2 நவம்பர் 2020, 8:09 pm

DIN

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி ஆட்சியா் முன்னிலையில் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

அக்டோபா் 27 முதல் நவம்பா் 2 ஆம் தேதி வரையில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் உள்பட 50க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

மேலும், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஆட்சியா் அலுவலகம் வரையில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கிவைத்தாா். இதில் ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாநகராட்சி ஊழியா்கள் ஏந்திச் சென்றனா்.

இதில் மாநகராட்சி துணை ஆணையா் எஸ்.மதுராந்தகி, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா்கள் பரிமளாதேவி, எழிலரசி, சசிலேகா மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் 50க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.