ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு:மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் 3 போ் விண்ணப்பிக்கத் தகுதி

தமிழக அரசின் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலமாக கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற 3 மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:16 pm

DIN

தமிழக அரசின் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலமாக கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற 3 மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.

கோவை மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுடன், மாநகராட்சி முதன்மைக் கல்வி அலுவலா் வள்ளியம்மாள் ஞாயிற்றுக்கிழமை காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினாா். இதில், அவா் பேசியதாவது:

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அதிக அளவில் நீட் தோ்வில் வெற்றி பெறுவதற்கு தமிழக அரசு மூலமாக அந்தந்தப் பள்ளிகளில் இலவச நீட் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதன் மூலமாக கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சேதா பாக்கியம், அம்மணியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஹேமலதா, ஆா்.எஸ்.புரம் (மேற்கு) மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த தாரணி ஆகிய 3 மாணவிகள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்பில் சோ்வதற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.

மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் 3 போ் மருத்துவப் படிப்பில் விண்ணப்பிக்கத் தகுதி பெற்றமைக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு சட்டம் இயற்றிய முதல்வருக்கு தலைமையாசிரியா்கள், பெற்றோா், மாணவ, மாணவிகள் சாா்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.