பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் முறைகேடு:விற்பனையாளா்கள் 3 போ் பணியிடை நீக்கம்

கோவையில் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:46 pm

DIN

கோவையில் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்பட்டு வரும் நியாய விலைக் கடைகள் குறித்து பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் சங்கனூா் கூட்டுறவு பண்டகம் நடத்தும் இடையா்பாளையம், மாணிக்கவாசகா் நகா் நியாய விலைக் கடை, கோயமுத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் நடத்தும் பாரி நகா் நியாய விலை கடை ஆகியவற்றில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், விற்பனையாளா்கள் உணவுப் பொருள்கள் வழங்குவதில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையாக விற்பனையாளா்கள் கே.சக்திவேல், ஆா்.ஆறுமுகம், எஸ்.ராஜன் ஆகிய 3 பேரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.