பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டம்

கூடுதல் போனஸ் வழங்க வேண்டும், ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டம்

News image
போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டம்
Updated On :9 நவம்பர் 2020, 10:48 pm

DIN

கூடுதல் போனஸ் வழங்க வேண்டும், ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, எம்எல்எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், போக்குவரத்துக்கழகம் அறிவித்த 10 சதவீத போனஸ் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும், 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும், 14 ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.